ஆடை சர்ச்சை! ஷூட்டிங் புறக்கணிப்பு….நடிகை ஓட்டம்..!

0
0

ஆடைபிரச்சனையால் நடிகை ஷூட்டிங்கை புறக்கணித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நண்டு என் பிரண்ட் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
பூனம் கெளர் ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை ஆவர். இவர் தமிழில் ‘நெஞ்சிருக்கும்’ வரை என்ற படத்தில் அறிமுகமானார்.


அதன் பின் ‘சேவல்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘யானை’, ‘வெடி ‘, ‘6 மெழுகுவர்த்திகள்’, ‘என்வழி தனி வழி’ ‘நாயகி’ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

 

தற்போது இயக்குனர்ஆண்டாள் ரமேஷ் இயக்கம் ‘நண்டு என் பிரண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்து வருகிறார்.

நண்டு என் பிரண்ட் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது ஒரு சில நாட்கள் மட்டும் நடிகை பூனம் யாரிடமும் சொல்லாமல் தனது ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

இது குறித்து இயக்குனர் ஜித்தான் ரமேஷ் கூறுகையில்: எங்கள் படத்தில் 2 கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். அதில் ஒருவராக பூனம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

நடிகை தனது ஆடைகளை தானே தேர்வு செய்வதாகவும் அதற்கான பணத்தை கொடுத்துவிடுங்கள் என்று கேட்டார் அதற்கும் நாங்கள் சரி என்று கூறியிருந்தோம்.

நாங்கள் எடுப்பது சிறு பட்ஜெட் படம்.ஆனால் நடிகை பூனம் உயர்ரக ஆடைகளை வாங்கிவந்து அதிகம் பணம் கேட்டார் அதற்கு நாங்கள் அவ்வளவு பட்ஜெட் இல்லை என்று கூறிவிட்டோம்.

மேலும், அவருக்கு ஸ்டார் ஓட்டலில் ரூம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

இதனால் படத் தயாரிப்பாளருக்கு பல லட்ச ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here