திரையுலகில் பாலியல் தொல்லை…! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஓபன் டாக்’..!

திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசினார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘காக்கா முட்டை’ படத்தில் அம்மா வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் ‘டாடி’ என்ற திரைப்படம் மூலம் நுழைந்துள்ளார்.
நடிகைகள் பலரும் சமீபகாலமாக தான் சினமா வாழ்கையில் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் மற்றும் இன்னல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

 

இந்நிலையில், ‘ஐஸ்வர்யா ராஜேஷ்’ தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

நான் 5 வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்புக் கேட்டு சென்றபோது என்னை ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்வீர்களா என கேட்டனர்.

இவர்கள் அக்ரீமென்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட், என்று பல பெயர்களில் இதனை கேட்பார்கள்.

ஒரு நடிகையாக ஜெயிக்க வைக்க திரையுலகம் இப்படி எல்லாம் பெண்களை வற்புறுத்துவது மிகவும் கேவலமான செயல் என்று அவர் கூறினார்.

About the author

Related

JOIN THE DISCUSSION