தினகரனுடன் கைகோர்ப்பு! தீவிர அரசியலில் விஷால்!!

0
0

சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கலின்போது ஏற்பட்ட குழப்பத்தால் விஷாலின் மனு தள்ளுபடியானது.

அவர் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகிறார்.  இதற்காக தினகரனுடன் கைகோர்க்க தயாராகிறார் விஷால்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் தனது பதவிகளை காப்பாற்றிக்கொள்ளவும், எதிர்ப்பாளர்களின் வாயை அடைக்கவும் அவர் அரசியலுக்கு வருவது தவிர்க்க இயலாததாகி விட்டது.

திமுக தரப்புக்கு அவர் தூது விட்டிருந்தார். ஆனால் திமுக தரப்பில் இருந்து சரியான சிக்னல் விஷாலுக்கு கிடைக்கவில்லை.

இதனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தனக்கு உறுதுணையாக இருந்த தினகரனுடன் அவர் இணைந்து அரசியல் செய்ய தயாராகி வருகிறார்.

அரசியலில் தனக்கு பின்புலம் வேண்டும் என்பதை தெரிந்துகொண்ட விஷால் இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

தினகரனின் வெற்றி குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன.

மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன்.

இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன்.

குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here