அனிதா வீட்டில் நடிகர் விஜய்! குடும்பத்தினருக்கு ஆறுதல்!!

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேரமுடியாத மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

நாடுமுழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

அனிதாவின் மரணம் தொடர்பாக தனது டுவிட்டரில் நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அனிதாவின் கடைசிப்பேட்டி, கடவுளுக்கு மருத்துவம் பார்க்க சென்றாயோ, காற்றில் கலைந்த கனவு போன்ற மீம்களையும் டுவிட்டரில் மறுபதிவு செய்திருந்தார் விஜய்.

இந்நிலையில் அனிதாவின் வீட்டுக்கு இன்று திடீரென்று சென்றார்.

அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு விஜய் சென்றார். அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த அனிதாவின் படத்துக்கு மரியாதை செய்த பின்னர் அதன் எதிரே அமர்ந்தார்.

 

வீட்டில் தரையில் அமர்ந்தபடி குடும்பத்தினருடன்  பேசிக்கொண்டிருந்தார்.  எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் நடிகர் உறுதி தெரிவித்தார்.

 

About the author

Related

JOIN THE DISCUSSION