நடிகர் ராஜ்குமார் மனைவி உடல் நல்லடக்கம்

0
2

கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 31 காலை 4.40 மணி அளவில் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்.

அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
பர்வதம்மாளின் மறைவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
திரைத்துறையினர் 3தினங்கள் துக்கம் அனுசரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

பர்வதம்மாள் உடல் பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு முதல்வர் சித்தராமையா, திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாலை அவர் உடல் ராஜ்குமாரின் சமாதி அருகே இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here