பிரதமரே சந்தோஷமாவா இருக்கீங்க ! மோடிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி!!

0
0

சென்னை: குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவின் வெற்றி குறித்து பிரதமரை கேள்வி கேட்டுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

 

பணம் வாபஸ், ஜிஎஸ்டி வரி,  பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் கொலை போன்ற விஷயங்களில் பாஜகவை விமர்சித்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

பாஜக வெற்றிக்களிப்பில் திளைத்துக்கொண்டுள்ள இந்நேரத்தில் அதன் வெற்றி குறித்தே பிரதமருக்கு கேள்வி கேட்டுள்ளார் நடிகர்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.

அன்பான பிரதமரே.  வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.  ஆனால் நீங்க உண்மையிலே சந்தோஷமாகவா இருக்கீங்க? என்று அவர் கேட்டுள்ளார்.

உங்கள் சொந்தமாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவேன் என்று கூறியது என்னவானது?

கொஞ்சம் யோசியுங்கள்.   1. பிரித்தாளும் அரசியல் உதவாது. 2. நமது தேசத்தில் மிகப்பெரிய விஷயங்கள் உள்ளன. பாகிஸ்தான், மதம், ஜாதி, துதிபாடும், கொலைமிரட்டல் விடுக்கும் கூட்டங்களுக்கு ஆதரவுதருவது உள்ளிட்ட விஷயங்களை விடவும் அவை பெரியவை.

3.கிராமங்கள் இன்னமும் முன்னேறவில்லை.  புறக்கணிக்கப்படும் விவசாயிகள், ஏழைகள், கிராமப்புற மக்களின் குரல்கள் சற்று அதிகமாகவே கேட்கிறது.

உங்களுக்கு அது கேட்கிறதா?  இவ்வாறு பிரதமரை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here