அரசியலுக்கு வருவேன்! பிரகாஷ்ராஜ் பேச்சு!!

0
0

பெங்களூர்: எனக்கு அரசியல் ஆசையில்லை. ஆனால், வந்துபார் என்று கூறினால் அரசியலுக்கு வரத்தயார் என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

பெங்களூர் பிரஸ் க்ளப் சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார் பிரகாஷ்ராஜ்.

இவ்விழாவில் முதல்வர் சித்தராமையா, நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு இந்த ஆண்டின் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டது.

விழாவில் ஏற்புரையாற்றிய நடிகர் பிரகாஷ் ராஜ்,  அரசியல் எப்படி இருக்கிறது  என்று எனக்கு தெரியும். அரசியலில் ஈடுபடுவது குறித்து எனக்கு ஆசை இல்லை. ஆனால், பலர் தொடைதட்டிக்கொண்டு வந்துபார் என்கின்றனர். அழுத்தங்கள் அதிகரித்தால் அரசியலுக்கு வருவேன். அதுஒன்றும் பெரிய விஷயமில்லை.

அரசை விமர்சிப்பவர்கள், விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். அவர்களது குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஒற்றைத்தன்மையுடன் அரசு எந்திரம் செயல்படுகிறது. அரசியல்வாதிகள் சர்ச்சைக்கருத்துக்களை தெரிவித்துவிட்டு வருத்தம் தெரிவித்துவிட்டு செல்கின்றனர். சாதாரண மனிதர்களாகிய நாம் அவர்கள் என்ன கூறினார்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

நான் கவுரிலங்கேஷின் மாணவன். அவர் கற்றுத்தந்தை கடைபிடித்து வருகிறேன்.

ஒரு கலைஞனாக எனக்கும் சமூக பொறுப்புகள் உள்ளன.  அவற்றை நிறைவேற்ற வேண்டிய கடமை எனக்கும் உள்ளது. இவ்வாறு பிரகாஷ் ராஜ் பேசினார்.

விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரகாஷ்ராஜ் அரசியலுக்கு  வருவதை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here