3வது மகளை தத்தெடுக்கிறார் நடிகர் கமலஹாசன்!

0
0

நடிகர் கமலஹாசன் 3வது மகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.

ஸ்டார்விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அதில் 52வது எபிசோடில் அறிமுகமானார் நடிகை சுஜா வருணி.

இவர் பிளஸ்2 படிக்கும்போது இவர் நடித்த பிளஸ்2 என்ற சினிமா திரைக்கு வந்தது.

அப்படத்தில் இவர் 8ம் வகுப்பு படிக்கும்போது நடிக்க தொடங்கியிருந்தார்.

இப்படத்துக்குப்பின் பெரிய வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் பாட்டு, காரக்டர் ரோல் என்று நடித்துவந்தார்.   குற்றம்23 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இவருக்கு பெரிய பிரேக் தரும்வகையில் பிக்பாஸ் அமைந்துள்ளது.

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் வருகின்றனர்.

இந்நிலையில் தன்னை சந்திக்க யாரும் வரவில்லையே என்று கலங்கி நிற்கிறார் சுஜா வருணி.

அவருக்கு ஆறுதல் அளித்தார் நடிகர் கமல்.  கவலைப்படாதே சுஜா. இரண்டு மூனு வாரம் பார்க்கலாம்.

யாரும் வரலேன்னா, நானே உனக்கு அப்பாவாகிறேன் என்று தெரிவித்துள்ளார் கமல்.

நடிகர் கமலுக்கு ஸ்ருதி, அக்‌ஷரா என்று 2மகள்கள் உள்ளனர் 3வது மகளாக சுஜாவருணியை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here