நவம்பரில் புதிய கட்சி! கமலின் அரசியல் திட்டம்!!

0
0

புதிய கட்சி துவக்கும் பணிகளில் நடிகர் கமலஹாசன் தீவிரம் காட்டிவருகிறார்.

நவம்பர் மாதம் 7ம் தேதி அவரது பிறந்த நாள் வருகிறது.

அன்றைய தினம் அவர் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தமிழக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார் கமல்.   இதற்கு அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள் பதிலடி தந்துள்ளனர்.

சில தினங்கள் முன் நடந்த நடிகர் சிவாஜிகணேசன் மணி மண்டபம் திறப்புவிழாவில் அமைச்சர்களை நேரில் அவர் சந்திக்க நேர்ந்தது.

அமைச்சர்களும், கமலும் கைகுலுக்கி சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்தும், கமல் அரசியலின் வெற்றிகுறித்த ரகசியம் தெரிந்தவர் என்றார்.

கமல் தனது பேச்சில், யார் தடுத்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன் என்றார்.

‘முதலில் புறக்கணிப்பார்கள். பின் சிரிப்பார்கள். சண்டை போடுவார்கள். இறுதியில் வெற்றி உனக்கே’ என்ற மகாத்மாகாந்தி சொன்ன வரிகளை வெளியிட்டு, ‘காந்தியின் வார்த்தைகள் இப்போது நமக்கு தேவையான பலத்தை அளிக்கின்றன’ என்று  மணிமண்டப விழா தொடர்பாக தனது அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களாக தனது நற்பணி மன்ற முக்கிய பொறுப்பாளர்களிடம் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே மாவட்ட அளவில் அரசின் குறைபாடுகள் குறித்து விபரங்கள் சேகரிக்க சொல்லியிருந்த கமல், அந்த விபரங்களை பெற்றார்.  கட்சி, கொடி, சின்னம், வெற்றி குறித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

டெங்கு பாதிப்பு உள்ளிட்ட சமூக நலப்பணிகளில் ரசிகர் மன்றத்தினர் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர் மன்றத்தினரை தொடர்ந்து வழக்கறிஞர்கள், மூத்த அரசியல்வாதிகளையும் அவர் ஆலோசிக்கிறார்.

பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் திட்டமும் அதனை தொடர்ந்து மாநாடு, கட்சி அறிவிப்பு என்று தனது அரசியல் திட்டங்களை கமலஹாசன் வகுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here