19 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை பாய்கிறது..?! சபாநாயகருடன் ஆலோசனை..!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த கெடு இன்றுடன் முடிவடைவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு கொறடா ராஜேந்திரன்,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனி நடத்தி வருகின்றனர்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்நிலையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலுக்கு கடிதம் அனுப்பினார். அதன் அடிப்படையில் சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.,க்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பினார்.

அவர்கள் அளித்த பதில் திருப்தி இல்லையென்று கூறிய சபாநாயகர் வரும் 14-ம் தேதிக்குள்(இன்று) பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அவர்களுக்கான கெடு இன்றுடன் முடிகிறது.

ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கூர்க்கில் குதூகலமாக இருக்கிறார்கள். இன்று அவர்கள் பதில் அளிப்பது போலவும் தெரியவில்லை.

அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசுக்கொறடா ராஜேந்திரன்,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர்
சபாநாயகர் தனபாலை தலைமை செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதே போல தினகரன் அணியினர் மீது நடவடிக்கை எடுத்தால் தினகரன் ஆட்சி கவிழ்ப்பு வேலையில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அவர்கள் தொடர்ந்து தொகுதியில் இல்லாமல் இருப்பது,தொகுதி பக்கம் வராமல் இருப்பது,தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை தீர்க்காமல் இருப்பது, தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்தாமல் இருப்பது போன்ற காரணங்களே போதுமானது என்று அந்த தொகுதி மக்களே காரணங்களை அடுக்குவது தான்
கொடுமை.

Related Topics : Tamilnadu News

 

About the author

Related

JOIN THE DISCUSSION