கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு! தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் பெருமிதம்!!

0
0

தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் நிறம் குறித்த பேதமை நீடிப்பது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நிற பேதமை குறித்து அபினவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

‘நான் எனது 15வது வயது முதல் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றேன். எனது தோலின் நிறம் குறித்து மற்றவர்களின் என்ணங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

 

தினமும் வெயிலில் தான் வலை பயிற்சியில் ஈடுபடுகிறேன். அதிலும் இந்தியாவில் அதிக வெப்பம் நிலவும் சென்னையில் தான் வசித்து வருகிறேன். அப்படி இந்த வெயிலில் பயிற்சி எடுப்பதைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை.

 

அதிலும் பயிற்சியை விரும்பி செய்கிறேன். அப்படி பயிற்சி செய்ததால் தான் இன்று இந்த நிலையை அடைந்துள்ளேன். என்னை பல பெயர்களில் அழைக்கிறார்கள். நான் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் பொறுத்துக் கொள்வேன்.


அந்த ஏளனத்தால் நான் குறைந்து போய்விடுவதில்லை. இன்னும் நான் செல்வதற்கு இலக்குகள் உள்ளன. தற்போது என் தோலின் நிறம் குறித்து கேலி பேசுபவர்களை நான் கண்டு கொள்வதில்லை.


இந்தியா முழுவதும் நிறத்தால் ஏளனத்தை சந்தித்து வரும் அனைவருக்காகவும் பேசுகிறேன். சமூக வளை தளங்களில் இது குறித்த  கருத்துக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

சிவப்பு நிறம் மட்டுமே அழகல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே. நான் வெளியிட்டுள்ள இந்த கருத்து இந்திய அணியில் யாரையும் குறிப்பிட்டல்ல. எனது நிறம் குறித்து ஏளனம் செய்தவர்களுக்காக  மட்டுமே.

இதை தயவு செய்து அரசியல் ஆக்க வேண்டாம்’. இவ்வாறு அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார்.

Related Topics : Sports News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here