எங்களுக்கும் ஆதார் வந்தாச்சு!

0
0

மனிதர்களுக்கு வழங்கப்படுவதைப்போன்று மாடுகளுக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட உள்ளது.
மத்திய பால்வள மேம்பாட்டு வாரியம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வீட்டுவிலங்குகளான ஆடும், மாடுகளுக்கு தனித்த அடையாள எண்ணுடன் கூடிய அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாடுகளின் உடல் நலனைக் கண்காணிக்கவும், எண்ணிக்கை, பெருக்கம், நோய் பரவல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் சேகரிப்பால் பால் உற்பத்தி விபரம், அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.


இத்திட்டப்படி, ஒவ்வொரு மாட்டுக்கும் 12 இலக்கம் கொண்ட தனித்த அடையாள எண் (யு.ஐ.டி.) வழங்கப்பட உள்ளது.
இதற்காக பார்கோடு கொண்ட ப்ளாஸ்டிக் அட்டை மாட்டின் காதில் பொருத்தப்படும்.
மாட்டு உரிமையாளரிடமும் நல அட்டை வழங்கப்பட உள்ளது.


கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாடுகளுக்கான ஆதார் எண் திட்டத்தால் கால்நடைகள் திருட்டு, இறைச்சிக்காக கடத்தப்படுவது போன்றவையும் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here