98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா

0
0

பாட்னாவை சேர்ந்த 98வயது முதியவர் எம்.ஏ. பரீட்சை எழுதி முடித்துள்ளார்.

பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ. முடித்துள்ளார்.
மிக அதிகளவில் எம்.ஏ. படித்துவரும் நபர் ராஜ்குமார் என்று லிம்கா புத்தகத்தில் இவரதுபெயர் இடம்பெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிறந்தவர் ராஜ்குமார். இவர் ஆக்ரா பல்கலைக்கழகத்தில் 1938ல் பட்டம் முடித்தார். பின்னர் சட்டப்படிப்பு முடித்து வேலைக்கு சென்றார்.
இவருக்கு பொருளாதாரம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் எழுந்தது.
பட்டம் வேண்டும் என்பதற்காக அல்ல.


தினந்தோறும் மக்கள் பணம்..பணம்.. என்று பறந்துவருகையில் அந்த பணத்தின் அடிப்படைதான் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன்.
அதற்காக பொருளாதாரம் படிக்க நினைத்தேன்.
இப்போது வீட்டின், நாட்டின் பிரச்சனைகள் என்ன என்பதில் எனக்கு தெளிவு வந்துவிட்டது என்கிறார் ராஜ்குமார் வைஸ்யா.


முதலாண்டு பரீட்சையில் தேர்ச்சி அடைந்ததைப்போன்றே இந்த ஆண்டும் சிறப்பான மதிப்பெண்களுடன் வெற்றிபெறுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
தற்போது பாட்னாவில் உள்ள மகன் சந்தோஷ்குமார் வீட்டில் ராஜ்குமார் வசித்துவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here