ஐயோ..600 எலும்புக் கூடுகள்..?? ராம் ரஹீம் சாமியார் ஆசிரமத்தில்…!

0
0

ராம் ரஹீம் சிங் சாமியார் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி, 30 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில் ஹரியானா மாநிலம் சிர்சா மாவட்டத்தில் உள்ள அவரது தலைமை ஆசிரமத்திற்குள் போலீசார் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அங்கு என்ன நடந்தது என்பது குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனி ப்ரீத்தி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஆசிரமத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் எரிக்கப்பட்ட நிலையில், 600 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் ராம் ரஹிமால் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மோட்சம் அளிப்பதாக கூறியும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


எரிக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த 600 எலும்புக் கூடுகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் 600 எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டதற்கு அதிகாரப்பூர்வ தகவலை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. அதேசமயம், தலைமறைவாக உள்ள ராம் ரஹீமின் வளர்ப்பு மகளான ஹனி ப்ரீத்தி எங்கிருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அவரிடம் விசாரணை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று போலீசார் அவரை தேடி கண்டுபிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவர் நேபாளத்திற்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேபாள போலீசாரின் உதவியுடன், அரியானா போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related Topics : National News

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here