சவுதியில் இருந்து 2ஆயிரம் தமிழ் தொழிலாளர்கள் வெளியேற்றம்

0
0

சவுதி அரேபியாவில் இருந்து 2ஆயிரம் தொழிலாளர்கள் தமிழகம் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.

சவுதி அரசு சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினர் திரும்பிச்செல்ல சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொது மன்னிப்பு திட்டம் மூலம் 20 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.


இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த பலரும் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சுமார் 2ஆயிரம் தொழிலாளர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சவூதியில் உள்ளனர்.
அவர்கள் ஒரு வாரத்தில் பொதுமன்னிப்பு திட்டத்தில் சொந்தமாநிலத்துக்கு திருப்பி அனுப்பப்படுவர்.

இதற்காக அனைத்து தூதரக அலுவலகங்களில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
வீடுதிரும்பும் தொழிலாளர்கள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here