அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு!

0
2

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துக்களை மறுத்து ஈர்ப்பு அலைகளை அளவிட்ட விஞ்ஞானிகள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2017ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ரைனர் வெய்ஸ், பாரி பரிஷ், கிப்த்ரோன் ஆகிய மூவரும் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசுக்குழு இன்று இதனை தெரிவித்தது.

பரிசுத்தொகையில் பாதி ரைனர் வெய்சுக்கும், மறுபாதியை பாரிபரிஷ் மற்றும் கிப்த்ரோன் பங்கிட்டுக்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஈர்ப்பு அலைகளை அளவிட முடியாது என்று கூறியிருந்தார்.

ஈர்ப்பு அலைகள் தத்துவத்துக்கு முன்னோடியாக இருந்த அவரது கருத்தை பொய்யென்று நிரூபித்து ஈர்ப்பு அலையை அளந்துள்ளனர் நோபல் விஞ்ஞானிகள்.

இதற்காக லேசர் இண்டர்பெரோமீட்டர் (லிகோ) என்ற கருவியை இவர்கள் உருவாக்கி ஆய்வில் ஈடுபட்டனர்.

வானத்தில் ஒளி சக்தியை இழந்துவிடும் வின்மீண்கள் கருந்துளையாகி விடுகின்றன.

அவ்வாறு இரு கருந்துளைகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது ஈர்ப்பு அலைகள் உருவாகின்றன. இந்த அலைகள் பூமியையும் வந்தடைகின்றன.

பூமியை வந்தடையும் ஈர்ப்பலைகள் மிகவும்  நுண்ணியவையாக உள்ளன.  இந்த அலைகள் பூமிக்கு வருவதற்கு 1.3பில்லியன் ஆண்டுகள் எடுத்துக்கொள்கின்றன.

இவற்றை அளவிட லூசியானா, ஹான்போர்டு பகுதியில் லிகோ கருவி பொருத்தப்பட்டு  பணிகள் நடந்தன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here